மீண்டும் ஷாமிலி


மீண்டும் ஷாமிலி
x
தினத்தந்தி 28 April 2018 7:49 AM GMT (Updated: 2018-04-28T13:19:46+05:30)

தமிழில் முன்னணி நடிகையாக இருந்து அஜித் குமாரை திருமணம் செய்தவர் ஷாலினி. இவரது தங்கை ஷாமிலி.

ஷாமிலி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்றவர். இவர் முதன் முறையாக ‘ஓயே’ என்ற தெலுங்கு படத்தில் சித்தார்த் ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானார். படம் சுமாராகவே ஓடியது.

இதையடுத்து மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு 2015-ம் ஆண்டு மலையாளத்தில் குஞ்சாக்கோபோபன் ஜோடியாக நடித்தார். அதுவும் வெற்றியடையவில்லை. இதையடுத்து தமிழில் விக்ரம்பிரபு ஜோடியாக நடித்த ‘வீரசிவாஜி’ படமும் தோல்வி.

இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்த ஷாமிலி, தற்போது தெலுங்கில் நாக சவுரியா ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சுனதர் சூர்யா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு ‘அம்மம்மாகாரி இல்லு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, தான் கதாநாயகியாக அறிமுகமான தெலுங்கு திரையுலகிலேயே மீண்டும் நடிப்பதால், இந்தப்படம் தனக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறாராம் ஷாமிலி. 

Next Story