இந்தியில் மகேஷ்பாபு படம்


இந்தியில் மகேஷ்பாபு படம்
x
தினத்தந்தி 28 April 2018 7:53 AM GMT (Updated: 28 April 2018 7:53 AM GMT)

தெலுங்கில் கொரட்டால சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து 2015-ம் ஆண்டு வெளியான ‘ஸ்ரீமந்துடு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

மகேஷ்பாபு இதையடுத்து  நடித்த ‘பிரம்மோற்சவம்’, ‘ஸ்பைடர்’ ஆகிய இரண்டு படங்களும் தோல்வியைத் தழுவின. இதனால் மீண்டும் கொரட்டால சிவாவுடன் கூட்டணி சேர்ந்தார் மகேஷ்பாபு. இந்தக் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளியான ‘பரத் அனி நேனு’ திரைப்படம், டோலிவுட்டில் அதிரிபுதிரி வெற்றியைப் பெற்றிருக்கிறது.

ஒரு இளைஞன், மாநிலத்தின் முதல்வரானால் எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வருவான் என்பதை இந்தப் படம் சொல்லியிருக்கிறது. வெளியான ஒரு வாரத்திற்குள் தெலுங்குதேசத்தில் ரூ.100 கோடியை ஈட்டியிருக்கிறதாம் இந்தத் திரைப்படம்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றியைக் கண்ட பாலிவுட்காரர்கள், இந்தப் படத்தை ரீமேக் செய்ய போட்டிபோட, டோலிவுட்காரர்களோ படத்தை டப் செய்து வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.

‘ஸ்பைடர்’ படத்தால் தமிழிலும் மகேஷ்பாபுவுக்கு நல்ல அறிமுகம் கிடைத்ததால், இங்கும் ‘பரத் அனி நேனு’ படத்தை டப் செய்து வெளியிடலாமா என்று யோசித்து வருகிறார்களாம். 

Next Story