ஞானவேல் ராஜாவின் புதிய படம்


ஞானவேல் ராஜாவின் புதிய படம்
x
தினத்தந்தி 2 May 2018 7:18 AM GMT (Updated: 2 May 2018 7:18 AM GMT)

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை அடுத்து கே.ஈ.ஞானவேல்ராஜா ஒரு புதிய படம் தயாரிக்கிறார். அதில், சிவகார்த்தி கேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இது, ஞானவேல்ராஜா தயாரிக்கும் 9-வது படம்.

‘ஒரு கல் ஒரு கண்ணாடி,’ ‘சிவா மனசுல சக்தி,’ ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க,’ ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ உள்பட பல படங்களை இயக்கிய ராஜேஷ் எம். இந்த படத்தை டைரக்டு செய்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் தயாராகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. 

Next Story