கவர்ச்சிக்கு மாறினார், பூனம் பாஜ்வா!


கவர்ச்சிக்கு மாறினார், பூனம் பாஜ்வா!
x
தினத்தந்தி 17 May 2018 10:00 PM GMT (Updated: 17 May 2018 8:07 AM GMT)

குடும்பப்பாங்காகவும், சற்றே கவர்ச்சியாகவும் நடித்து வந்த பூனம் பாஜ்வா, இனிமேல் படுகவர்ச்சியாக நடிக்க முடிவு செய்து இருக்கிறார்.

பூனம் பாஜ்வா, மும்பையை சேர்ந்தவர். `சேவல்' என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து `தெனாவட்டு,' `கச்சேரி ஆரம்பம்,' `தம்பிகோட்டை,' `துரோகி,' `ரோமியோ ஜூலியட்,' `அரண்மனை-2 ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். இவர், நீண்ட இடைவெளிக்குப்பின், `மாஸ்டர் பீஸ்' என்ற மலையாள படத்தில் நடித்து இருக்கிறார்.

அந்த படத்தில், பூனம் பாஜ்வா கல்லூரி விரிவுரையாளராக நடித்துள்ளார்.

அதில் கதாநாயகனாக நடித்திருப்பவர், மம்முட்டி. வரலட்சுமி சரத்குமார் காவல் துறை அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்னொரு முக்கிய வேடத்தில், மகிமா நம்பியார் வருகிறார்.

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் இந்த படத்துக்கு தமிழில், `பேராசிரியர் சாணக்யன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பேராசிரியராக மம்முட்டி நடித்து இருக்கிறார்.

இதுவரை குடும்பப்பாங்காகவும், சற்றே கவர்ச்சியாகவும் நடித்து வந்த பூனம் பாஜ்வா, இனிமேல் படுகவர்ச்சியாக நடிக்க முடிவு செய்து இருக்கிறார். அதோடு ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடவும் தயார் என்கிறார். 

Next Story