‘காளி’ என்று பெயர் சூட்டினால்...!


‘காளி’ என்று பெயர் சூட்டினால்...!
x
தினத்தந்தி 17 May 2018 10:15 PM GMT (Updated: 17 May 2018 8:12 AM GMT)

`வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் டைரக்டரான கிருத்திகா உதயநிதி, 2-வது படமாக, `காளி’யை இயக்கியிருக்கிறார்.

காளி படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து இருக்கிறார். கதாநாயகிகளாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகிய 4 பேரும் நடித்துள்ளனர். ``காளி படத்தை ஆரம்பித்தபோது, இந்த `டைட்டில்’ வேண்டாம். `காளி’ என்று பெயர் சூட்டினால், ஏதாவது விபரீதம் நிகழும் என்று நிறைய பேர் பயமுறுத்தினார்களாம்.

``பயமுறுத்தியபடி, எதுவும் நிகழவில்லை. அது, ஒரு மூட நம்பிக்கை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. நான், என் சொந்த காலில் நிற்க விரும்புகிறேன். அதற்காகவே படங்களை இயக்கி வருகிறேன்’’ என்று கூறுகிறார், கிருத்திகா உதயநிதி! 

Next Story