காதல் பிரச்சினை? இளம் பாடகர் சுட்டுக்கொலை


காதல் பிரச்சினை? இளம் பாடகர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 30 May 2018 10:00 PM GMT (Updated: 30 May 2018 7:34 PM GMT)

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் நவ்ஜோத் சிங்(வயது 22). இவர் பிரபல பாடகர் ஆவார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் நவ்ஜோத் சிங்(வயது 22). இவர் பிரபல பாடகர் ஆவார். சண்டிகர் அருகே உள்ள எஸ்.ஏ.எஸ் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரை தேரா பஸ்ஸி என்ற இடத்தில் மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர். அவரது பிணத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.

நவ்ஜோத் சிங் உடலில் 5 குண்டுகள் இருந்தன. அவரை அருகில் இருந்து சுட்டுள்ளனர். அவரது காரும் அருகிலேயே நின்றது. பொருட்கள் எதுவும் திருட்டுப்போகவில்லை. நவ்ஜோத் கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தனது தாய்க்கு போன் செய்து சொந்த கிராமமான பெஹ்ராவுக்கு திரும்பி வருவதாக கூறியிருக்கிறார்.

நவ்ஜோத் சிங்கும் ஒரு பெண்ணும் உணவகம் ஒன்றில் ஜோடியாக சாப்பிட்டதாக நேரில் பார்த்தவர் கூறி உள்ளார். எனவே காதல் பிரச்சினையால் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

Next Story