படக்குழுவினருடன் தனுஷ் ஆலோசனை!


படக்குழுவினருடன் தனுஷ் ஆலோசனை!
x
தினத்தந்தி 5 July 2018 10:30 PM GMT (Updated: 5 July 2018 9:37 AM GMT)

பாலாஜி மோகன் இயக்க, தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வந்த படம், ‘மாரி-2.’

பாலாஜி மோகன் இயக்க, தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வந்த படம், ‘மாரி-2.’ இந்த படத்தின் படப்பிடிப்பு 99 சதவீதம் முடிவடைந்தது. கடைசியாக ஒரு சண்டை காட்சி படமானது. இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக வேண்டியிருக்கிறது.

அந்த பாடல் காட்சியை எங்கே படமாக்குவது? என்று படக்குழுவினருடன் தயாரிப்பாளர்-கதாநாயகன் தனுஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்!

Next Story