மீண்டும் டைரக்டு செய்கிறார், ராஜ்கிரண்!


மீண்டும் டைரக்டு செய்கிறார், ராஜ்கிரண்!
x
தினத்தந்தி 9 Nov 2018 7:53 AM GMT (Updated: 9 Nov 2018 7:53 AM GMT)

‘அரண்மனைக்கிளி,’ ‘எல்லாமே என் ராசாதான்’ ஆகிய படங்களை டைரக்டு செய்த ராஜ்கிரண்.

‘அரண்மனைக்கிளி,’ ‘எல்லாமே என் ராசாதான்’ ஆகிய படங்களை டைரக்டு செய்த ராஜ்கிரண், அதன் பிறகு முழு நேர நடிகராக மாறினார். சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து அவர் நடித்து வந்தார்.

நீண்ட இடைவெளிக்குப்பின் அவர் மீண்டும் ஒரு படத்தை டைரக்டு செய்கிறார். பிரகாஷ்ராஜ் நடித்து வெற்றி பெற்ற ஒரு இந்தி படத்தை தமிழில் தயாரித்து இயக்கும் உரிமையை ராஜ்கிரண் வாங்கியிருக்கிறார். இந்தி படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த வேடத்தில், ராஜ்கிரண் நடிப்பதுடன், அந்த படத்தை டைரக்டும் செய்கிறார்!

Next Story