இரண்டாவது சுற்றில் அனுஷ்கா!


இரண்டாவது சுற்றில் அனுஷ்கா!
x
தினத்தந்தி 6 Jan 2019 7:39 AM GMT (Updated: 6 Jan 2019 7:39 AM GMT)

தென்னிந்திய கதாநாயகிகளில் பிரபலமான ஒருவராக இருந்த அனுஷ்கா, `இஞ்சி இடுப்பழகி' என்ற படத்துக்காக, உடல் எடையை கூட்டினார்.

அந்த படம் முடி வடைந்ததும் தனது உடல் எடையை அவர் குறைக்க முயன்றார். குறையவில்லை. அதற்காக பட்டினி கிடந்தார். `ஜிம்'மே கதி என்று உடற்பயிற்சி கூடத்தில் நேரத்தை கழித்தார். அவருடைய உடல் குறைய மாட்டேன் என்று அடம் பிடித்தது.

ஆஸ்திரியா நாட்டில் உடல் எடையை குறைக்க வழியிருக்கிறது என்று அனுஷ்காவுக்கு நெருக்கமான ஒருவர் `ஐடியா' கொடுத்தார். அதை ஏற்றுக்கொண்டு ஆஸ்திரியா சென்ற அனுஷ்காவுக்கு கை மேல் பலன் கிடைத்தது. அவர் உடல் மெலிந்தது. மெலிந்த உடலுடன் ஐதராபாத் திரும்பிய அனுஷ்கா, டைரக்டர் ராஜமவுலியின் மகன் திருமணத்துக்காக ஜெய்ப்பூர் சென்றார். திருமண விழாவில் கலந்து கொண்டு நடனம் ஆடினார்.

அனுஷ்கா தனது இரண்டாவது சுற்றை ஆரம்பித்து விட்டார். தெலுங்கு படங்களுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழ் படங்களுக்கும் கொடுக்க அவர் முடிவு செய்திருக்கிறார்!

Next Story