சம்பளத்தை உயர்த்திய நகைச்சுவை நடிகர்!


சம்பளத்தை உயர்த்திய நகைச்சுவை நடிகர்!
x
தினத்தந்தி 12 Feb 2019 10:16 AM GMT (Updated: 12 Feb 2019 10:16 AM GMT)

அறிமுகமான படத்தின் பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கும் நகைச்சுவை நடிகர் காட்டில் இப்போது அடைமழை பெய்து வருகிறது.

ஓய்வே இல்லாத அளவுக்கு இரவு-பகலாக நடித்து வருகிறார். “ஒரு படத்தில் 2 மணி நேரம் மட்டுமே நடிப்பேன்” என்ற அவருடைய நிபந்தனைக்கு எல்லா தயாரிப்பாளர்களும் சம்மதிக்கிறார்களாம்.

இப்படி ஒரு நிபந்தனை விதித்தால், தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து விடும் என்று அவர் நினைத்தது தப்புக்கணக்கு ஆகிவிட்டதாம். இதையடுத்து அந்த நகைச்சுவை நடிகர் தனது சம்பளத்தை தினம் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி விட்டாராம்! அடேங்கப்பா!

Next Story