சினிமா துளிகள்

திலீப்புடன் நடிக்கும் நதியா + "||" + Nadiya with Dilip

திலீப்புடன் நடிக்கும் நதியா

திலீப்புடன் நடிக்கும் நதியா
மலையாளத்தில் நடிகர் திலீப் நடிக்கும் படத்தில் நடிகை நதியா நடிக்கிறார்.
மலையாளத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆயாள் ஜீவிச்சிருப்புண்டு.’ நடிகர் விஜய்பாபு கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தை கே.பி.வியாசன் இயக்கியிருந்தார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் இதுவாகும். இந்த நிலையில் வியாசன், மலையாளத்தில் முக்கிய நடிகரான திலீப்பை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும், அதில் அனுசித்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் பிரபல நடிகர் சித்தார்த், நதியா ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்கள். தன்னிடம் வரும் படங்களை எல்லாம் ஒத்துக் கொள்ளாமல், குறிப்பிட்ட படங்களைத் தேர்ந்தெடுத்தே நதியா நடிக்கிறார். அதன்படி மலையாளத்தில் இந்தப் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை