தயாரிப்பு நிர்வாகிகளின் ஆதங்கம்!


தயாரிப்பு நிர்வாகிகளின் ஆதங்கம்!
x
தினத்தந்தி 19 Feb 2019 1:14 PM GMT (Updated: 19 Feb 2019 1:14 PM GMT)

“சில கதாநாயகர்கள் அறிமுகமாகும்போது எந்த பந்தாவும் இல்லாமல், பணிவுடன் நடந்து கொள்கிறார்கள். கொஞ்சம் வளர ஆரம்பித்ததும் போனில் பேசுவதைக்கூட கவுரவ குறைச்சலாக கருதுகிறார்கள்.

அது தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, டைரக்டராக இருந்தாலும் சரி, அவர்களுடன் போனில் பேசுவதில்லை.

சூட்கேஸ் நிறைய பணத்தை கொடுக்கும்போது மட்டுமே அந்த கதாநாயகர்கள் சிரிக்கிறார்கள். மற்ற நேரங்களில், பந்தாவுடன் நடந்து கொள்கிறார்கள்” என்று ஆதங்கப்படுகிறார்கள், சில தயாரிப்பு நிர்வாகிகள்!

Next Story