டிரைலர் கார்னர் : ஹாப்ஸ் அன்ட் ஷா


டிரைலர் கார்னர் : ஹாப்ஸ் அன்ட் ஷா
x
தினத்தந்தி 27 April 2019 4:33 AM GMT (Updated: 27 April 2019 4:33 AM GMT)

இரண்டாவது டிரைலர் வெளியாகி பல கேள்விகளுக்கு விடையளித்துள்ளது

ஜாஸன் ஸ்டேத்தம், ட்வெய்ன் ஜான்ஸன் (ராக்), ரோமன் ரெய்ங்ஸ், வனேஸா கிர்பி, இட்ரிஸ் எல்பா ஆகியோர் நடிப்பில் உருவாகி ஆகஸ்டு மாதம் வெளியாக இருக்கிறது ஹாப்ஸ் அன்ட் ஷா. புகழ்பெற்ற பாஸ்ட் அன்ட் பியூரியஸ் வரிசை படங்களின் கதாபாத்திரங்களான ஹாப்ஸ், ஷா இருவரையும் மைய கதாபாத்திரங்களாகக் கொண்டு படம் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே படத்தின் ஒரு டிரைலர் வெளியாகி பல கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தது.

தற்போது இரண்டாவது டிரைலர் வெளியாகி பல கேள்விகளுக்கு விடையளித்துள்ளது. பாஸ்ட் அன்ட் பியூரியஸ் வரிசை படங்களின் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தீவிரமாக இருக்கின்றது. யூ-டியூப்பில் டிரைலரை பார்த்தவர்களின் எண்ணிக்கை கோடிகளைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.


Next Story