சிவகார்த்திகேயன் படத்துக்கு எம்.ஜி.ஆர். பட ‘டைட்டில்’


சிவகார்த்திகேயன் படத்துக்கு எம்.ஜி.ஆர். பட ‘டைட்டில்’
x
தினத்தந்தி 28 Jun 2019 11:44 AM GMT (Updated: 28 Jun 2019 11:44 AM GMT)

‘மெரினா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு புதிய கதாநாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்.

‘மெரினா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு புதிய கதாநாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன், ரஜினி முருகன், மனம் கொத்திப்பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ, வேலைக்காரன், சீமராஜா ஆகிய படங்களில் நடித்தார்.

அவருடைய புதிய படத்துக்கு, ‘எங்க வீட்டு பிள்ளை’ என்ற எம்.ஜி.ஆர். பட ‘டைட்டில்’ சூட்டப்பட்டிருப்பதாக ஒரு தகவல் பரவியது. இதுபற்றி விசாரித்தபோது, அது வெறும் வதந்தி என்று தெரியவந்தது. ‘‘பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில், ‘எங்க வீட்டு பிள்ளை’யும் ஒன்று. சிவகார்த்திகேயன் படத்துக்கு என்ன ‘டைட்டில்’ என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை’’ என்கிறார்கள் படக்குழுவினர்!

Next Story