தனுசுடன் நடிக்கும் ஹாலிவுட் நடிகர்!


தனுசுடன் நடிக்கும் ஹாலிவுட் நடிகர்!
x
தினத்தந்தி 27 July 2019 11:45 PM GMT (Updated: 27 July 2019 6:08 PM GMT)

தனுஷ் சிறந்த கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறார். தனது கதாபாத்திரம் நடிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளதாக இருக்கிறதா? என்றும் பார்த்துக் கொள்கிறார்.

 கதையும், கதாபாத்திரமும் தனக்கு பொருத்தமாக இருக்கிறதா? என்பதில் தனுஷ்  கவனமாக இருக்கிறார். இப்போது அவர் வெற்றிமாறன் டைரக்‌ஷனில் ஒரு படம், மாரி செல்வராஜ் டைரக்‌ஷனில் ஒரு படம் என 2 புதிய படங்களில் நடித்து வருகிறார். 

அடுத்து, கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இந்த படத்தை 2 பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் பெரும்பகுதி காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன.

அதில், ஹாலிவுட் நடிகர் ஒருவர் தனுசுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்!

Next Story