சினிமா துளிகள்

சிவா ஜோடியாக பிரியா ஆனந்த்! + "||" + Priya Anand paired with Siva

சிவா ஜோடியாக பிரியா ஆனந்த்!

சிவா ஜோடியாக பிரியா ஆனந்த்!
சிவா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார்.
‘வணக்கம் சென்னை’ தமிழ்ப்படம் இரண்டாம் பாகம் படத்தை அடுத்து சிவா நடிக்கும் புதிய படம், ‘சுமோ.’ இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் வி.டி.வி.கணேஷ், யோகி பாபு ஆகிய இரு வரும் நடிக்கிறார்கள்.

சிவா கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தின் திரைக் கதை-வசனத்தையும் எழுதியிருக்கிறார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். எஸ்.பி.ஹோசிமின் டைரக்டு செய்கிறார். ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார்.