மேஜர் ரவியோடு இணையும் டொவினோ தாமஸ்


மேஜர் ரவியோடு இணையும் டொவினோ தாமஸ்
x
தினத்தந்தி 23 Aug 2019 11:00 PM GMT (Updated: 23 Aug 2019 1:09 PM GMT)

மேஜர் ரவி தன்னுடைய அடுத்த படத்தில் டொவினோ தாமஸை ஒப்பந்தம் செய்துள்ளார்.

ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், மலையாளத்தில் பிரபல  இயக்குனராக இருக்கும் மேஜர் ரவி. இவர் இயக்கிய படங்களில் பெரும்பாலானவை ராணுவத்தினை மையமாக வைத்து  எடுக்கப்பட்டவைதான். மேஜர் ரவியும், நடிகர் மோகன்லாலும் இணைந்து கொடுத்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால், அதில் இருக்கும் நுணுக்கங்களைக் கொண்டு, மக்களைக் கவரும் வகையில் விஷயங்களைக் கொடுப்பது இவரது தனிச் சிறப்பு. மோகன்லால், மம்முட்டி, பிருத்விராஜ் போன்ற பெரிய பெரிய நடிகர்களையே இயக்கி வந்த மேஜர் ரவி, தன்னுடைய அடுத்த ராணுவத்தை மையமாகக் கொண்ட கதையில், மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் டொவினோ தாமஸை ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதற்கான தீவிர கதை விவாதத்தில் மேஜர் ரவி ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Next Story