சினிமா துளிகள்

விஜய் பற்றி பிரபாஸ் கருத்து! + "||" + Prabhas comments on Vijay

விஜய் பற்றி பிரபாஸ் கருத்து!

விஜய் பற்றி பிரபாஸ் கருத்து!
பிரபாஸ் விஜய் பற்றி கருத்து தெரிவித்தார்.
‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ படங்களின் மூலம் இந்திய சினிமாவையே தன் பக்கம் ஈர்த்தவர், பிரபாஸ். தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான இவர் நடிப்பில் அடுத்து, ‘சாஹோ’ என்ற படம் திரைக்கு வர இருக்கிறது. இதுவும் ‘பாகுபலி’ போன்ற பிரமாண்டமான படம்தான். ரூ.250 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னையில் நடந்த ஒரு பேட்டியில், பிரபாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் விஜய் பற்றி கருத்து தெரிவித்தார். “பாகுபலி படத்தில் விஜய் நடித்து இருந்தால், அவருக்கு எந்த வேடம் பொருத்தமாக இருக்கும்? என்று கேட்கப்பட்டது.

அதற்கு பிரபாஸ், “பாகுபலி வேடமே அவர் நடித்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று பதில் அளித்தார்.