சினிமா துளிகள்

ரஜினிகாந்த் படத்துக்கு இமான் இசை! + "||" + Imman music for Rajinikanth movie

ரஜினிகாந்த் படத்துக்கு இமான் இசை!

ரஜினிகாந்த் படத்துக்கு இமான் இசை!
ரஜினிகாந்த் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில், ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். படப் பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இதில், அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
ரஜினிகாந்த், சிவா டைரக்‌ஷனில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இருவரும் இணைந்து பணிபுரியும் முதல் படம், இது.

இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். சிவா டைரக்‌ஷனில் வெளிவந்த ‘விஸ்வாசம்’ படத்துக்கு இமான்தான் இசையமைத்தார். அந்த படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் படத்தின் இசையமைப்பாளராக டி.இமானை சிவா தேர்ந்தெடுத்து இருக்கிறார்.