நீச்சல் உடையில் அமலாபால் மலை ஏறி சாகசம்


நீச்சல் உடையில் அமலாபால் மலை ஏறி சாகசம்
x
தினத்தந்தி 14 Sep 2019 10:15 PM GMT (Updated: 14 Sep 2019 10:38 AM GMT)

நீச்சல் உடையில் மலை ஏறி அமலாபால் சாகசம் செய்துள்ளார்.

‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர், அமலாபால். ‘மைனா’, ‘தெய்வதிருமகள்’, ‘வேட்டை’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘வேலையில்லா பட்டதாரி’ உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சமீபத்தில் வெளியான ‘ஆடை’ படத்தில் ஆடையின்றி தைரியமாக நடித்து அசத்தியிருந்தார்.

தமிழிலும், மலையாளத்திலும் படு பிசியாக நடித்து கொண்டிருக்கும்  அமலாபால் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில், நீச்சல் உடையில் காட்டில் உள்ள ஒரு மலையில் ஏறுவது போன்ற சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ‘லைக்’ செய்துள்ளனர்.

Next Story