ஸ்ரீதேவிக்கு முன்னுரை எழுதிய கஜோல்


ஸ்ரீதேவிக்கு முன்னுரை எழுதிய கஜோல்
x
தினத்தந்தி 3 Oct 2019 9:30 PM GMT (Updated: 3 Oct 2019 9:27 AM GMT)

நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை படத்தில் கஜோல் முன்னுரை எழுதிக் கொடுத்திருக்கிறாராம்.

இந்திய சினிமாக்களின் அநேக மொழிகளில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவரது வாழ்க்கை வரலாறு ஒன்று புத்தகமாக தயாராகி இருக்கிறது. ‘ஸ்ரீதேவி: தி எடர்னல் ஸ்கிரீன் தேவி’ என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகத்தை சத்யார்த் நாயக் எழுதியிருக்கிறார். பிரபல எழுத்தாளரும், திரைக்கதை ஆசிரியருமான இவர், ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூரிடம் புத்தகம் எழுது வதற்கான முறையான அனுமதியைப் பெற்றுதான் இதை செய் திருக்கிறாராம். இந்த புத்தகத்தில் முன்னுரை எழுதுவதற்காக, நடிகை கஜோலை அணுகியிருக்கிறார், எழுத்தாளர் சத்யார்த் நாயக். அதற்கு ஒப்புக்கொண்ட கஜோல், முன்னுரையை எழுதிக் கொடுத்திருக்கிறாராம். அதில் “ஸ்ரீதேவியின் மிகப்பெரிய ரசிகை நான். அவரது படங்களையும், திரையில் வரும் அவரது ஸ்கிரீன் மேஜிக்கையும் பார்த்துதான் நான் வளர்ந்திருக்கிறேன். அப்படி நான் ரசித்த ஒருவரின் புத்தகத்திற்கு முன்னுரை எழுதுவது எனக்கு கிடைத்த பாக்கியமாகவே நான் கருதுகிறேன்.

இந்த புத்தகத்தில் குழந்தைப் பருவம் முதல் தன் இறுதிகாலம் வரை 50 ஆண்டுகளாக புகழின் உச்சியில் இருந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை பயணம் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தை அவரது ரசிகர்கள் அனைவரும் விரும்புவார்கள்” என்று முன்னுரை அளித் திருக்கிறாராம்.

Next Story