சினிமா துளிகள்

ஏமாற்றிய பாலிவுட் வசூல் + "||" + upset for Bollywood collections

ஏமாற்றிய பாலிவுட் வசூல்

ஏமாற்றிய பாலிவுட் வசூல்
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியாகியது, ‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம். சுதந்திர போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்மரெட்டியின் வரலாற்றை மையமாக வைத்து உருவான இந்தத் திரைப்படத்தில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதிபாபு, நயன்தாரா, தமன்னா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
அமிதாப் பச்சன் நடித்திருந்த காரணத்தால், இந்தியில் நல்ல வசூலை இந்தப் படம் பெறும் என்று படக்கு ழுவினர் எதிப்பார்த்திருந்தனர். ஆனால் அவர் களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. ‘பாகுபலி’ கதாநாயகர் பிரபாஸ் நடிப்பில் உருவான ‘சாஹோ’ படமே, இந்தியில் முதல் நாளில் ரூ.30 கோடி வரை வசூல் செய்திருந்தது. அதனால் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக விளங்கும் அமிதாப் பச்சன் நடித்திருக்கும், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம் அங்கு கூடுதலான வசூலைப் பெறும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் முதல் நாளில் வட இந்தியா முழுவதும் இந்தப் படம் வெறும் ரூ.3 கோடி மட்டுமே வசூலித்து படக்குழுவினர் அனைவரையும் கலங்கடித்து விட்டது. தென்னிந்தியாவில் மட்டும்தான் முதல் நாளில் ரூ.63 கோடி என்ற நல்லநிலையை படம் எட்டியிருக்கிறது. எந்த இடத்தில் தவறு செய்தோம் என்று தெரியாமல், படக்குழுவினர் அதிர்ச்சி கலந்த ஏமாற்றத்தில் உறைந்துபோய் இருக்கிறார்களாம்.