22 ஆண்டுகளுக்குப் பின் இணையும் கூட்டணி


22 ஆண்டுகளுக்குப் பின் இணையும் கூட்டணி
x
தினத்தந்தி 18 Oct 2019 11:15 AM GMT (Updated: 18 Oct 2019 11:15 AM GMT)

மலையாளத்தில் குடும்ப உறவுகளை மையமாக வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சத்யன் அந்திக்காடு.

லையாளத்தில் குடும்ப உறவுகளை மையமாக வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சத்யன் அந்திக்காடு. இவரது இயக்கத்தில் பகத் பாசில் நடித்த ‘ஞான் பிரகாசன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்த படத்தை இயக்குவதற்கான பணியில் இறங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் மலையாள மொழியில் உச்ச நடிகராக இருக்கும் மம்முட்டியை நடிக்க வைக்க அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 1997-ம் ஆண்டுக்கு முன்பு வரை மம்முட்டியை வைத்து பல படங்களை இயக்கிய சத்யன் அந்திக்காடு, அதன்பிறகு மம்முட்டியோடு சேர்ந்து படம் இயக்குவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தன்னுடைய அடுத்த படத்தில் மம்முட்டிதான் கதாநாயகன் என்று உறுதியாக இருக்கிறாராம் சத்யன் அந்திக்காடு. இதற்கு மம்முட்டியும் ஓ.கே. சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. 1997-ம் ஆண்டு வெளிவந்த ‘ஓராள் மாத்திரம்’ என்ற படம்தான், மம்முட்டியை வைத்து சத்யன் அந்திக்காடு இயக்கிய கடைசி திரைப்படமாகும். இதையடுத்து தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தக் கூட்டணி இணைய இருப்பது, மம்முட்டி ரசிகர்கள் மத்தியிலும், மலையாள சினிமா உலகத்தினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

Next Story