அப்பா வேடத்தில், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ்!


அப்பா வேடத்தில், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ்!
x
தினத்தந்தி 19 Oct 2019 11:00 PM GMT (Updated: 19 Oct 2019 4:47 PM GMT)

கற்பகம், கை கொடுத்த தெய்வம், குலமா குணமா, பணமா பாசமா, செல்வம் போன்ற காலத்தால் அழிக்க முடியாத திரைக்காவியங்களை கொடுத்தவர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மகன் கே.எஸ்.ஜி.வெங்கடேஷ். அப்பாவின் வாரிசாக திரையுலகுக்கு வந்த இவர், ஒளிப்பதிவாளராக தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்.

பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இவர், அடுத்து நடிகர் ஆனார். பல படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் அப்பா மற்றும் குணச்சித்ர வேடங்களிலும் பிரகாசித்தார்.

சமீபத்தில் திரைக்கு வந்த ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தில், தமன்னாவின் தந்தையாக உருக்கமான வேடத்தில் நடித்து இருந்தார். ‘‘இந்த படமும், கதாபாத்திரமும் எனக்கு நிறைய பாராட்டுகளை சம்பாதித்து கொடுத்து இருக்கிறது. ‘‘தொடர்ந்து இதுபோன்ற அப்பா வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற தூண்டுதலை எனக்குள் புகுத்தி இருக்கிறது’’ என்கிறார், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ்.

Next Story