சினிமா துளிகள்

‘அசுரனாக’ மிரட்டியவர்! + "||" + Who threatens to be a monster!

‘அசுரனாக’ மிரட்டியவர்!

‘அசுரனாக’ மிரட்டியவர்!
சமீபத்தில் திரைக்கு வந்த ‘அசுரன்’ படத்தில், சாதி வெறி பிடித்த வில்லனாக-அம்மு அபிராமி தலையில் காலணிகளை சுமக்க வைத்த கொடூரனாக மிரட்டியவர், நித்தீஷ் வீரா.
‘அசுரன்’ படத்தை பார்த்து இவருக்கு புது பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. இதுபற்றி அவர் கூறுகிறார்:-

‘‘நான், ‘புதுப்பேட்டை’ படத்தில் அறிமுகமானேன்.அதன் பிறகு எனக்கு அடையாளமாக அமைந்த படம், ஒன்பது ரூபாய் நோட்டு. ‘காலா’ படத்தில் ரஜினிகாந்துடன் நடித்தேன். இப்போது, ‘சிந்தனை செய்,’ ‘பற’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். வில்லனாக மட்டும் அல்ல...எந்த வேடம் கொடுத்தாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன்’’ என்கிறார், நித்தீஷ் வீரா.