‘வெப் தொடரில், அமலாபால்!


‘வெப் தொடரில், அமலாபால்!
x
தினத்தந்தி 19 Oct 2019 11:45 PM GMT (Updated: 19 Oct 2019 6:20 PM GMT)

வட இந்திய நடிகர்-நடிகைகளைப் போல் தென்னிந்திய நடிகர்-நடிகைகளும் ‘வெப்’ தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த பட்டியலில் புதிதாக, அமலாபால் இணைந்து இருக்கிறார். இதுபற்றி அவர் சொல்கிறார்:-

‘‘கடந்த சில வருடங்களாக நான் மிகவும் வித்தியாசமான-சவால் நிறைந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். புதிய சிந்தனைகளுக்கும், படைப்புகளுக்கும் வரவேற்பும், மதிப்பும் தருகிறார்கள். ‘ஆடை’ படத்துக்கு கிடைத்த வரவேற்பை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அந்த ஆதரவுதான் மேலும் புதியதை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில், என் சினிமா பயணத்தில், அடுத்து ஒரு புதிய படைப்பில் நடிக்க இருக்கிறேன்.

அந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை இயக்கும் அவரை போன்ற டைரக்டர்களின் படங்களில் நடிப்பது மகிழ்ச்சியை தருகிறது.’’

Next Story