ரசிகர்களை பாராட்டினார்!


ரசிகர்களை பாராட்டினார்!
x
தினத்தந்தி 18 Jan 2020 11:30 PM GMT (Updated: 2020-01-19T01:48:04+05:30)

முன்னணி கதாநாயகர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பெயரில் உள்ள ரசிகர் மன்றங்களை ஊக்குவித்து வருகிறார்கள். அவர்கள் வரிசையில் புதுசாக, விஜய்சேதுபதியும் இணைந்து இருக்கிறார்.

சமீபத்தில் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி அவருடைய ரசிகர் மன்றங்கள் சார்பில் பல்வேறு மருத்துவ முகாம்களும், இலவச சிகிச்சைகளும் நடைபெற்றன.

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், குழந்தையின்மை ஆகிய குறைபாடுகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. இலவச கண் சிகிச்சையும், ரத்ததான முகாமும் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை செய்த ரசிகர்களை விஜய்சேதுபதி நேரில் அழைத்து பாராட்டினார்!

Next Story