கண் கலங்கிய ரசிகர்!


கண் கலங்கிய ரசிகர்!
x
தினத்தந்தி 16 Feb 2020 12:45 AM GMT (Updated: 15 Feb 2020 2:29 PM GMT)

விஜய் சேதுபதி-திரிஷா ஜோடி நடித்து வெற்றி பெற்ற 96 படம், ‘ஜானு’ என்ற பெயரில் தெலுங்கில் தயாரானது.

சர்வானந்த்-சமந்தா ஜோடியாக நடித்தார்கள். சமீபத்தில் திரைக்கு வந்த இந்த படத்துக்கு ஆந்திராவில் வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்த ஒரு ரசிகர், வாய்விட்டு கதறி அழுதார். “ஜானு படம் என் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை போல் இருக்கிறது. என் பழைய வாழ்க்கையை ‘ஜானு’ நினைவூட்டியது’’ என்று கூறி கண்கலங்கினார், அந்த ரசிகர்!

Next Story
  • chat