பெயர் வைக்கும் முன்பே வியாபாரம் ஆனது!


பெயர் வைக்கும் முன்பே வியாபாரம் ஆனது!
x
தினத்தந்தி 23 Feb 2020 4:30 AM GMT (Updated: 22 Feb 2020 1:45 PM GMT)

தனுஷ் நடித்த படங்கள் வரிசையாக வெற்றி பெற்றதன் காரணமாக அவருடைய ‘மார்க்கெட்’ நிலவரம் உச்சத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

தனுஷ் இதுவரை 39 படங்களில் நடித்து இருக்கிறார். 40-வது படம் தயாரிப்பில் இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.

படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அதற்குள் அனைத்து ‘ஏரியா’க்களும் வியாபாரமாகி விட்டது. படத்தை திரைக்கு கொண்டு வரும் உரிமையை டிரைடன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

‘அசுரன்,’ ‘பட்டாஸ்’ ஆகிய 2 படங்களும் வெற்றி பெற்றதால் தனுசின் புதிய படம், மிகப்பெரிய தொகைக்கு வியாபாரமாகி இருக்கிறது. இந்த படத்தில் தனுசுடன் ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா நடராஜன், கலையரசன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார்.

Next Story