அசோக் செல்வன்-நிஹாரிகாவுடன் குடும்ப உறவுகளின் மேன்மையை நகைச்சுவையாக சொல்லும் படம்
அசோக் செல்வன்-நிஹாரிகாவுடன் குடும்ப உறவுகளின் மேன்மையை நகைச்சுவையாக சொல்லும் படம் ஒன்று உருவாகி வருகிறது.
சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த அசோக் செல்வன், அடுத்து குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் ஒரு நகைச்சுவை படத்தில் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
நிஹாரிகா கதாநாயகியாக நடிக்கிறார். டைரக்டர் சுசீந்திரனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த ஸ்வாதினி, இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். ஜே.செல்வகுமார் தயாரிக்கிறார்.
படம் தொடர்பாக அவர் பேசும்போது, “அசோக் செல்வனுடன் எங்கள் நிறுவனம் மீண்டும் இணைந்ததில், மகிழ்ச்சி. அற்புதமான உணர்வுகளை முகத்தில் காட்டுவதில், நிஹாரிகா கெட்டி. டைரக்டர் ஸ்வாதினியின் கடுமையான உழைப்பை பார்த்து ஆச்சரியப்பட்டோம். தொடர்ந்து குடும்பப்பாங்கான நகைச்சுவை படங்களை தயாரிப்பதை எங்கள் நோக்கமாக கொண்டிருக்கிறோம்” என்றார்.
Related Tags :
Next Story