‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் இருந்து மனோபாலா மதபோதகராக நடித்த காட்சி நீக்கப்பட்டது


‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் இருந்து மனோபாலா மதபோதகராக நடித்த காட்சி நீக்கப்பட்டது
x
தினத்தந்தி 20 Nov 2020 3:23 AM GMT (Updated: 20 Nov 2020 3:23 AM GMT)

‘மூக்குத்தி அம்மன்’ படத்தில், மதபோதகராக மனோபாலா நடித்து இருந்தார்.

தீபாவளி விருந்தாக வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில், மதபோதகராக மனோபாலா நடித்து இருந்தார். அவர் மேடையில் நின்றுகொண்டு நோயாளிகளை குணப்படுத்துவது போலவும், ‘மூக்குத்தி அம்மன்’ நயன்தாரா மேடை ஏறி, “கயவர்கள் முடிவில்லா தண்டனையை அனுபவிப்பார்கள். ஜீசஸ் என் நண்பார்தான். அவருக்கு நீ செய்வது தெரிந்தால் அவ்வளவுதான். உன்னை எல்லாம் கொதிக்கும் எண்ணையில் பொறித்து எடுக்க வேண்டும்” என்று சொல்வது போல் அந்த காட்சி அமைந்து இருந்தது. அதை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்.


Next Story