இந்தியில் ரீமேக்காகும் 2 தமிழ் படங்கள்


இந்தியில் ரீமேக்காகும் 2 தமிழ் படங்கள்
x
தினத்தந்தி 3 Jan 2021 10:30 PM GMT (Updated: 3 Jan 2021 6:22 PM GMT)

தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

சமீபத்தில் லாரன்ஸ் நடித்த காஞ்சனா படம் அக்‌ஷய்குமார் நடிக்க லட்சுமி பாம் என்ற பெயரில் இந்தியில் ரீமேக்காகி ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. இந்த நிலையில் தமிழில் வசூல் குவித்த கோலமாவு கோகிலா, மாநகரம் ஆகிய 2 படங்களையும் இந்தியில் ரீமேக் செய்வதை அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர். நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படம் நயன்தாரா, யோகிபாபு, சரண்யா உள்ளிட்டோர் நடித்து 2018-ல் வெளியானது. இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை ஒப்பந்தம் செய்துள்ளனர். சித்தார்த் சென் இயக்குகிறார். மாநகரம் படம் ஸ்ரீ, சந்திப் கிஷன் நடிப்பில் 2017-ல் ரிலீசானது. இந்த படத்தின் மூலம்தான் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமாகி கார்த்தியின் கைதி, விஜய் நடித்துள்ள மாஸ்டர் படங்களை இயக்கும் அளவுக்கு உயர்ந்தார். மாநகரம் இந்தி ரீமேக்கில் ஒரு நாயகனாக விக்ராந்த் மாசேவும், இன்னொரு நாயகனாக விஜய்சேதுபதியும் நடிக்க உள்ளனர். சந்தோஷ் சிவன் இயக்குகிறார். இந்த படத்துக்கு மும்பைகர் என்று பெயரிட்டு உள்ளனர்.

Next Story