“ஆனந்தியின் திறமை இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை”; ஒரு டைரக்டரின் ஆதங்கம்


“ஆனந்தியின் திறமை இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை”; ஒரு டைரக்டரின் ஆதங்கம்
x
தினத்தந்தி 13 Feb 2021 4:23 PM GMT (Updated: 13 Feb 2021 4:23 PM GMT)

‘கயல்’ ஆனந்தி, ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

ஒரு சராசரி பெண்ணின் கல்விப்பயணத்தையும், அவருடைய வாழ்க்கையையும் மிக அழகாக சொல்லியிருக்கும் படம், இது. படத்தை பற்றி அதன் டைரக்டர் ராஜசேகர் துரைசாமி கூறியதாவது:-

“இது என் முதல் படம். வாழ்க்கையில் சந்தித்த விஷயங்களை திரைக்கதையாக்கி இருக்கிறேன். ஒரு சின்ன கிராமத்து பெண், சமூகத்தில் பெண்கள் மீது வைக்கப்படும் வரம்புகளை தாண்டி கல்வியை பெறுவதும், தன் முழு ஆற்றலை அறிந்து கொள்வதும்தான் கதை.

கதைநாயகி ‘கயல்’ ஆனந்தியின் திறமை இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை. அதை முழுமையாக வெளிப்படுத்தும் படமாக, ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ அமையும். கிராமத்தில் இருந்து ஐ.டி. வேலைக்காக சென்னைக்கு வரும் ஒரு பெண் வழியில் சந்திக்கும் காதல் மற்றும் திருப்பங்கள்தான் கதை. இது, மென்மையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்”.

Next Story