வாயை மூடச்சொல்லி ஓவியாவை சாடிய காயத்ரி ரகுராம்


வாயை மூடச்சொல்லி ஓவியாவை சாடிய காயத்ரி ரகுராம்
x
தினத்தந்தி 14 Feb 2021 10:47 PM GMT (Updated: 14 Feb 2021 10:47 PM GMT)

ஓவியாவை வலைத்தளத்தில் பலர் விமர்சித்தனர். கண்டிக்கவும் செய்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு கடும் போட்டியாளராக விளங்கிய நடிகை காயத்ரி ரகுராமும் சாடி உள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘கோபேக் மோடி' என்ற ஹேஷ்டேக் உருவானது. அதில் மோடிக்கு எதிரான கருத்துகள் வெளியிடப்பட்டன. நடிகை ஓவியாவும் மோடிக்கு எதிராக பதிவு வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 ஓவியாவை வலைத்தளத்தில் பலர் விமர்சித்தனர். கண்டிக்கவும் செய்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு கடும் போட்டியாளராக விளங்கிய நடிகை காயத்ரி ரகுராமும் சாடி உள்ளார். அவர் வலைத்தளத்தில் ஓவியாவுக்கு எதிராக வெளியிட்ட பதிவில், “வாயை மூடு. உன்னை அவமதிப்பதற்கு எதுவும் இல்லை. நான் எப்போதும் உனக்கு எதிரானவள். இது தி.மு.க.வின் திசை திருப்பும் வேலைதான். அவர்கள் பிக்பாஸ் போட்டியாளரான ஓவியாவை வேலைக்கு அமர்த்தி இதை செய்ய வைத்துள்ளனர். பணம் வெவ்வேறு மொழிகளில் பேசுகிறது'' என்று கூறியுள்ளார். இந்த மோதல் பரபரப்பாகி உள்ளது.

Next Story
  • chat