சுஷ்மிதா சென் காதல் முறிவு?


சுஷ்மிதா சென் காதல் முறிவு?
x
தினத்தந்தி 15 Feb 2021 10:54 PM GMT (Updated: 15 Feb 2021 10:54 PM GMT)

பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென். இவர் அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தில் சக்கலக்க பேபி லுக்குவிட தோணலையா பாடலுக்கு நடனம் ஆடினார்.

 நாகார்ஜுனா ஜோடியாக ரட்சகன் படத்திலும் நடித்து இருந்தார். பிரபஞ்ச அழகி பட்டத்தையும் வென்று இருக்கிறார். சுஷ்மிதா சென்னுக்கு 45 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். ஏற்கனவே நட்சத்திர ஓட்டல் அதிபரை அவர் காதலித்து தோல்வியில் முடிந்தது. தற்போது தன்னை விட 16 வயது குறைந்த ரொமன் லால் என்பவரை காதலித்து வருகிறார். இந்த நிலையில் சுஷ்மிதா சென் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அவர் மாறுவார் என்று பெண்கள் நினைக்கின்றனர். அவர் மாறமாட்டார். அவள் பிரியமாட்டாள் என்று ஆண்கள் நினைக்கின்றனர். ஆனால் அவள் சென்றுவிடுவாள்'' என்று கூறியுள்ளார். இதன் மூலம் ரொமன் லாலை சுஷ்மிதா பிரிந்து விட்டதாக இந்தி பட உலகினர் பேசுகிறார்கள். ரசிகர்களும் ரொமன் லாலை பிரிந்துவிட்டீர்களா? என்று வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Next Story