16 வருடங்களுக்கு பிறகு மகளுடன் நடித்த அருண் பாண்டியன்


16 வருடங்களுக்கு பிறகு மகளுடன் நடித்த அருண் பாண்டியன்
x
தினத்தந்தி 15 Feb 2021 11:01 PM GMT (Updated: 15 Feb 2021 11:01 PM GMT)

மலையாளத்தில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த வருடம் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ஹெலன். தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து தயாராகி இருந்தது.

நர்சிங் மாணவி ஹெலனின் காதலனை குடிபோதையில் இருந்ததாக போலீஸ் கைது செய்கிறது. தந்தைக்கு காதல் விஷயம் தெரிந்து ஹெலனுடன் பேசுவதை நிறுத்துகிறார். பின்னர் ஹெலன் திடீரென்று மாயமாகிறாள். அவள் நிலைமை என்ன ஆனது என்பது கதை. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் அருண் பாண்டியன் கடும் போட்டிக்கு இடையில் வாங்கி தந்தை கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஹெலன் கதாபாத்திரத்தில் வருகிறார். 16 வருடங்களுக்கு பிறகு அருண் பாண்டியன் மீண்டும் ஹெலன் ரீமேக் மூலம் நடிக்க வந்துள்ளார். படத்துக்கு அன்பிற்கினியாள் என்று பெயர் வைத்துள்ளதாக தற்போது அறிவித்து உள்ளனர். இந்த படத்தை கோகுல் டைரக்டு செய்கிறார். இவர் விஜய்சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கி பிரபலமானவர்.

Next Story