ஆர்யாவின் ‘டெடி’ ஓ.டி.டி.யில் ரிலீஸ்


ஆர்யாவின் ‘டெடி’ ஓ.டி.டி.யில் ரிலீஸ்
x
தினத்தந்தி 20 Feb 2021 12:02 PM GMT (Updated: 20 Feb 2021 12:02 PM GMT)

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகும் புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிடும் போக்கு நீடிக்கிறது.

ஏற்கனவே சூர்யாவின் சூரரை போற்று, ஜெயம் ரவியின் பூமி, நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, மாதவன் நடித்துள்ள சைலன்ஸ் உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டி.யில் வந்தன. சமுத்திரக்கனி நடித்துள்ள ஏலே படம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் 30 நாட்களுக்கு பிறகே படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடுவோம் என்ற உறுதிமொழியை கொடுக்க தயாரிப்பாளர் மறுத்ததால் அந்த படத்தை தியேட்டர்களில் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்து விட்டனர். இதனால் ஏலே படமும் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகிறது. இந்த நிலையில் சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா ஜோடியாக நடித்துள்ள டெடி படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிடுகிறார்கள். இந்த படத்தை பிரபல ஓ.டி.டி. தளம் அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளது. தற்போது ஆர்யா நடித்து வரும் சார்பட்டா, அரண்மனை 3 ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியாக உள்ளன.

Next Story