சினிமா துளிகள்

அதிக படங்களில் நடிக்கும் ஜி.வி. பிரகாஷ் + "||" + Starring in more films G.V. Prakash

அதிக படங்களில் நடிக்கும் ஜி.வி. பிரகாஷ்

அதிக படங்களில் நடிக்கும் ஜி.வி. பிரகாஷ்
ஜி.வி. பிரகாஷுக்கு படங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் குவிகின்றன. அவரது கதை தேர்வும், தனித்துவமான நடிப்பும் வெற்றிக்கு காரணம் என்கின்றனர்.
கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் வெற்றிகரமாக வலம் வரும் ஜி.வி. பிரகாஷுக்கு படங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் குவிகின்றன. அவரது கதை தேர்வும், தனித்துவமான நடிப்பும் வெற்றிக்கு காரணம் என்கின்றனர். இந்த வருடத்தில் அதிக படங்களில் நடிக்கும் கதாநாயகனாக மாறி இருக்கிறார். தற்போது அவர் கைவசம் ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4 ஜி, காதலை தேடி நித்யானந்தா, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர், ராஜேஷ் இயக்கும் படம், வெற்றிமாறன் உதவியாளர் மதிமாறன் புகழேந்தி இயக்கும் படம், டிராப் சிட்டி என்ற ஹாலிவுட் படம் என 11 படங்கள் உள்ளன. இந்த படங்கள் மார்ச் மாதம் இறுதியில் இருந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. முதல் படமாக ராஜேஷ் இயக்கத்தில் நடித்துள்ள படம் வெளியாகும் என்று தெரிகிறது. இதில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். தொடர்ந்து பேச்சிலர், ஜெயில் படங்கள் வெளிவர உள்ளன. ஆயிரம் ஜென்மங்கள், 4ஜி பட வேலைகளும் இறுதிகட்டத்தில் உள்ளன.