சினிமா துளிகள்

நடிகை ரிச்சா கர்ப்பம் + "||" + Actress Richa is pregnant

நடிகை ரிச்சா கர்ப்பம்

நடிகை ரிச்சா கர்ப்பம்
தமிழில் தனுஷ் ஜோடியாக மயக்கம் என்ன படத்தில் நடித்தவர் ரிச்சா கங்கோத்யாய. தொடர்ந்து சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் நடித்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.
கடைசியாக அவரது நடிப்பில் போலீஸ் டைகர் என்ற படம் வந்தது. அதன்பிறகு படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கினார். ரிச்சாவுக்கும் வெளிநாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ஜோ லங்கேலா என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் 2019-ல் திருமணம் செய்து கொண்டனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு ரிச்சா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். 

கர்ப்பமான தகவலை சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்துள்ள அவர் ஜூன் மாதம் குழந்தை பிறக்கும் என்றும் கூறியுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரிச்சாவுக்கு வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.