கணவரிடம் பிடித்ததும், பிடிக்காததும்... - நடிகை நமீதா மனம் திறந்த பேட்டி


கணவரிடம் பிடித்ததும், பிடிக்காததும்... - நடிகை நமீதா மனம் திறந்த பேட்டி
x
தினத்தந்தி 18 July 2021 1:46 AM GMT (Updated: 18 July 2021 1:46 AM GMT)

நடிகை நமீதா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு அவர் ஆந்திராவை சேர்ந்த வீரா என்ற இளைஞரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது நமீதா சொந்த பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த பட நிறுவனம் சார்பில், ‘பவ் பவ்’ என்ற படத்தை தயாரித்து முடித்து இருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெறுகின்றன. அதில் ஈடுபட்டிருந்த நமீதாவிடம் நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு நமீதா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: ‘பவ் பவ்’ படம் எப்படி வந்திருக்கிறது? எப்போது திரைக்கு வரும்?

பதில்: படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. நான் நன்றாக நடித்து இருப்பதாக படக்குழுவினர் அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டதும், படம் திரைக்கு வரும் தேதி முடிவு செய்யப்படும்.

கேள்வி: உங்கள் கணவர் எப்படிப்பட்ட சுபாவம் கொண்டவர்?

பதில்: நேர்மையானவர். கூர்மையானவர்...

கேள்வி: அவருக்கு பிடித்த கதாநாயகிகள் யார் - யார்?

பதில்: சிம்ரன், தமன்னா.

கேள்வி: அவரிடம் பிடித்ததும், பிடிக்காததும்..?

பதில்: காலையில் விழித்ததும் என்னைப் பார்த்து, ‘ஐ லவ் யூ’ சொல்வது, பிடிக்கும். அவர் செல்போனில் பேசும்போது, நான் பேசுவதை கவனிக்கவே மாட்டார். அது எனக்கு பிடிக்காது. இவ்வாறு நமீதா கூறினார்.

Next Story