முதன்முறையாக வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் சினேகா


முதன்முறையாக வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் சினேகா
x
தினத்தந்தி 16 Sep 2021 5:17 PM GMT (Updated: 16 Sep 2021 5:17 PM GMT)

குழந்தைகளை மையமாக வைத்து உருவாகவிருக்கும் புதிய படத்தில் நடிகை சினேகாவும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் ஜோடியாக நடிக்க உள்ளனர்.

தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் அருண் வைத்யநாதன். இவர் கல்யாண சமையல் சாதம் என்ற படத்தை தயாரித்து இருக்கிறார்.

தற்போது அருணாச்சலம் வைத்யநாதன் என பெயரை மாற்றியுள்ள இவர், குழந்தைகளை மையமாக வைத்து உருவாகவிருக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘ஷாட் பூட் 3’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் மூலம் வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தில் நடிகை சினேகாவும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் ஜோடியாக நடிக்க உள்ளனர். இதற்கு முன்னர் வெங்கட் பிரபு இயக்கிய கோவா படத்தில் நடிகை சினேகா நடித்திருந்தாலும், இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை. மேலும் இப்படத்தில் நடிகர் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

Next Story