பிகினி உடையில் அமலாபால் - வைரலாகும் புகைப்படங்கள்


பிகினி உடையில் அமலாபால் - வைரலாகும் புகைப்படங்கள்
x
தினத்தந்தி 27 Sep 2021 1:51 PM GMT (Updated: 27 Sep 2021 1:51 PM GMT)

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். ஆனால் அவரது முதல் படமே சர்ச்சையை ஏற்படுத்தியது. மைனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பின்னர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். இதையடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம் போன்ற படங்கள் உள்ளன.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலாபால், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story