புஷ்பா படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றம்


புஷ்பா படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றம்
x
தினத்தந்தி 4 Oct 2021 6:02 PM GMT (Updated: 4 Oct 2021 6:02 PM GMT)

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படம் 2 பாகங்களாக உருவாகி வரும் நிலையில், தற்போது முதல் பாகத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்துள்ள இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர்.

முதல் பாகத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்திருந்த படக்குழு, தற்போது ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக, வருகிற டிசம்பர் மாதம் 17-ந் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரன்வீர் சிங் நடித்துள்ள 83 என்கிற படம் ரிலீசாக உள்ளதால், புஷ்பா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாம்.

Next Story