சம்பளமே வாங்காமல் நடிக்கும் விஜய் சேதுபதி


சம்பளமே வாங்காமல் நடிக்கும் விஜய் சேதுபதி
x
தினத்தந்தி 4 Oct 2021 6:22 PM GMT (Updated: 4 Oct 2021 6:22 PM GMT)

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, ஒரு படத்தில் சம்பளமே வாங்காமல் நடிக்க இருக்கிறாராம்.

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல், முகிழ், விக்ரம், கடைசி விவசாயி, மாமனிதன், மும்பைகார், காந்தி டாக்ஸ், மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர பாலிவுட்டில் ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் உருவாகும் வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியிடம் ஒரு குறும்படத்திற்கான யோசனையை சொல்லியிருக்கிறார் பாக்கியராஜ். கதையைக் கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம் விஜய் சேதுபதி. அதோடு இந்தப் படத்தில் நடிப்பதற்கு தனக்கு சம்பளமே வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்.

இதைப்போல இன்னும் நான்கு குறும்படங்களுக்கான கதையைத் தயார் செய்துவிட்டு அதிலும் பிரபல கதாநாயகர்களை நடிக்க வைத்து  அதை ஒரு ஆந்தாலஜி படமாக திரையரங்கத்திலோ, ஓடிடி தளத்திலோ வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் பாக்யராஜ்.

Next Story