தெலுங்கு நடிகர் சங்க தலைவர் நடிகர் விஷ்ணு மஞ்சு 2-வது திருமணம்?


தெலுங்கு நடிகர் சங்க தலைவர் நடிகர் விஷ்ணு மஞ்சு 2-வது திருமணம்?
x
தினத்தந்தி 28 Oct 2021 4:49 AM GMT (Updated: 28 Oct 2021 4:49 AM GMT)

விஷ்ணு மஞ்சு 2-ம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இவருக்கும், பிரணதி என்பவருக்கும் திருமணம் முடிந்து 2019-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு. இவர் நடிகர் மோகன்பாபுவின் மகன். சமீபத்தில் நடந்த தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் பிரகாஷ்ராஜை எதிர்த்து போட்டியிட்டு விஷ்ணு மஞ்சு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் விஷ்ணு மஞ்சு 2-ம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இவருக்கும், பிரணதி என்பவருக்கும் திருமணம் முடிந்து 2019-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

தற்போது விஷ்ணு மஞ்சு வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவரை காதலிப்பதாகவும், இவர்கள் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதனை விஷ்ணு மஞ்சு மறுத்துள்ளார்.

நடிகை சமந்தாவுக்கு எதிராக வலைத்தளத்தில் வதந்திகள் பரவி உள்ள நிலையில் விஷ்ணு மஞ்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வதந்திகளை பரப்பி நடிகர்களின் புகழை கெடுப்பது நல்லதல்ல. ஆரோக்கியமான கருத்துகளை வெளியிட்டால் ஆட்சேபனை இல்லை. ஆனால், சில யூடியூப் சேனல்கள் நடிகர்களை குறிவைத்து தாக்குவது சரியல்ல’ என்று கூறியுள்ளார்.


Next Story