கணவருடன் மதுபான விளம்பரத்தில் காஜல் அகர்வால்... கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்


கணவருடன் மதுபான விளம்பரத்தில் காஜல் அகர்வால்... கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்
x
தினத்தந்தி 2 Nov 2021 6:02 PM GMT (Updated: 2 Nov 2021 6:02 PM GMT)

முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தனது கணவருடன் சேர்ந்து மதுபான விளம்பரத்தில் நடித்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவிற்கு 2008ஆம் ஆண்டு பழனி என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் காஜல் அகர்வால். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. ஆனால் தெலுங்கில் வெளியான மகதீரா திரைப்படம் சூப்பர் ஹிட்டானதால் மிகவும் பிரபலமானார்.

இதையடுத்து தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி உள்ளிட்ட தொடர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக புகழ் பெற்றார். இவர் கடந்த ஆண்டு கெளதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் தீபாவளி தினத்தை முன்னிட்டு விஸ்கி பிராண்ட் ஒன்றிற்கு கணவருடன் சேர்ந்து விளம்பரம் செய்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. ஒரு முன்னணி நடிகை இப்படியா நடந்துகொள்வது என ரசிகர்கள் பலர் திட்டி கமென்ட் செய்து வருகின்றனர்.

Next Story