வனம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


வனம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Nov 2021 10:19 PM GMT (Updated: 4 Nov 2021 10:19 PM GMT)

அறிமுக இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி, அனுசித்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ‘வனம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயிற்சி பெற்றவர், ஸ்ரீகண்டன் ஆனந்த். 10-க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கிய இவர், முதல்முறையாக, ‘வனம்’ என்ற முழு நீள படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ படங்களில் நடித்த வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சில மலையாள படங்களில் நடித்த அனுசித்தாரா, ‘தடம்’, ‘மூக்குத்தி அம்மன்’ படங்களில் நடித்த ஸ்ம்ருதி வெங்கட் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இவர்களுடன் அழகம் பெருமாள், வேல ராமமூர்த்தி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வனம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். ‘மாயா’, ‘கேம் ஓவர்’, ‘ஒப்பம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த ரான் ஏதன் யோஹான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Next Story
  • chat