டாக்டர் படத்தால் வரவேற்பு: கராத்தே கார்த்தி உற்சாகம்


டாக்டர் படத்தால் வரவேற்பு: கராத்தே கார்த்தி உற்சாகம்
x
தினத்தந்தி 12 Nov 2021 1:06 PM GMT (Updated: 12 Nov 2021 1:06 PM GMT)

மத்திய ரிசர்வ் போலீசில் பணியாற்றிக் கொண்டிருந்த கராத்தே கார்த்தி, சினிமா மீது இருந்த ஆசையால் வேலையை ராஜினாமா செய்து விட்டார்.


‘‘அரசாங்க வேலையை யாராவது விட்டுவிட்டு சினிமாவுக்கு போவார்களா?’’ என்று உறவினர்கள் திட்டினார்கள். கேமரா எங்கே இருக்கிறது என்று தெரியாமலே துணை நடிகராக, கூட்டத்தில் ஒருவனாக நடித்து இருக்கிறேன்.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் ஓரளவு என்னை அடையாளம் காட்டியது. ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன், யோகி பாபு, வினய் ஆகியோருடன் நடித்தது, மறக்க முடியாத அனுபவம். என் கதாபாத்திரம் பேசப்படுவதில் சந்தோசம்’’ என்கிறார், கராத்தே கார்த்தி.

Next Story