டைரக்டர் கவுதம்மேனன் கதாநாயகன் ஆனார்


டைரக்டர் கவுதம்மேனன் கதாநாயகன் ஆனார்
x
தினத்தந்தி 19 Nov 2021 11:20 AM GMT (Updated: 19 Nov 2021 11:20 AM GMT)

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் உள்பட பல படங்களை இயக்கிய கவுதம் வாசுதேவ் மேனன், ‘ருத்ரதாண்டவம்’ உள்பட சில படங்களில் வில்லனாக நடித்தார்.

அவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க அவர் முடிவு செய்து இருக்கிறார். இந்த நிலையில், அவரை வினோத்குமார் என்ற டைரக்டர் ஒரு படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார்.

‘ஸ்மார்ட் போன்களின் அசுரத்தனமான வளர்ச்சியால் எத்தனை பாதிப்புகள் ஏற்படுகிறது?’ என்ற கருவை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

Next Story