விஜய் சேதுபதி மீது வழக்கு... கிரிமினல், அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


விஜய் சேதுபதி மீது வழக்கு... கிரிமினல், அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Dec 2021 4:42 PM GMT (Updated: 6 Dec 2021 4:42 PM GMT)

சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் மற்றும் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மகாகாந்தி. நடிகரான இவர், சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்ல கடந்த நவம்பர் மாதம் 2-ந்தேதி இரவு பெங்களூரு விமான நிலையம் சென்றேன். அங்கு எதிர்பாராதவிதமாக நடிகர் விஜய்சேதுபதியை சந்தித்தேன். திரைத்துறையில் அவரது சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவிக்க சென்றேன். ஆனால் எனது வாழ்த்துக்களை ஏற்க மறுத்த அவர், பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி பேசியதுடன், என்னையும், எனது சாதி பற்றியும் தவறாக பேசினார்.

விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய என் மீது அவருடைய மேலாளர் ஜான்சன் தாக்கியதுடன், காதில் அறைந்தார். இதில் எனது செவித்திறன் பாதிக்கப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உண்மை இவ்வாறு இருக்க மறுநாள், தான் தாக்கப்பட்டதாக விஜய்சேதுபதி தரப்பில் ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள். திரைத்துறையில் உள்ள சக நடிகரை பாராட்ட சென்ற என்னை தாக்கியதுடன், அதை உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய்சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story